காஞ்சிபுரம் மதங்கீஸ்வரர் கோவிலில் செங்குளவி கூடு; பக்தர்கள் அச்சம்
ADDED :112 days ago
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மதங்கீஸ்வரர் கோவிலில், அதிக விஷத்தன்மை கொண்ட செங்குளவி கூடு கட்டியுள்ளதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். காஞ்சிபுரம் ஹாஸ்பிட்டல் சாலையில் மதங்கீஸ்வரர் கோவில் உள்ளது. தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள இக்கோவிலுக்கு தினமும் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மூலவர் சன்னி தி வலதுபுறம் உள்ள சிற்பத்தில் செங்குளவி கூடு கட்டியுள்ளது. இதனா ல், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சப்படுகின்றனர். பக்தர்களை அச்சுறுத்தும் செங்குளவி கூட்டை அகற்ற கோவிலை பராமரிக்கும் தொல்லியல் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.