சந்திர கிரகணம் முடிந்து திருப்பதி கோவில் நடை திறப்பு; பக்தர்கள் தரிசனம்
ADDED :33 minutes ago
திருப்பதி; திருமலையில் சந்திர கிரகணத்திற்குப் பிறகு கோவில் நடை இன்று திறக்கப்பட்டன.திருமலையில் சந்திர கிரகணத்திற்காக கோவில் நடை நேற்று மூடப்பட்டது. இன்று செப்டம்பர் 8ம் தேதி அதிகாலை 3 மணிக்குப் பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலின் நடை மூடப்பட்டது. நேற்று இரவு 9.50 மணி முதல் அதிகாலை 1.31 மணி வரை சந்திர கிரகணம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, இன்று திங்கள்கிழமை காலை வேத முறைப்படி சுத்திகரிப்பு மற்றும் பிற பூஜைகள் முடித்த பிறகு, ஸ்ரீவாரி கோயில் கதவுகள் அதிகாலை 3 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது. மூடப்பட்ட அன்னபிரசாதம் விநியோகமும் இன்று காலை 8 மணி முதல் மீண்டும் தொடங்கியது. பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.