உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையில் சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதம் நிறைவு

கோவையில் சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதம் நிறைவு

கோவை; சாதுர்மாஸ்ய பூஜை மற்றும் சாதுர் மாதம் விரதத்தை ஸ்ரீ சக்கர மகாமேருபீடம் பிலாஸ்பூர்ஸ்ரீ சக்கர மகா மேரு பீடம் ஸ்ரீ மகா பெரியவரின் பரம சீடர் ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் நிறைவு செய்தார். சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் தலைமையில் கோவை ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் கடந்த மாதம் 10ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது. இதில் தினமும் காலை மற்றும் மாலை சந்திரமவுலீஸ்வரர் பூஜையை சுவாமிகள் தொடர்ந்து நடத்தினார்.தினமும் பல்வேறு விதமான இசை பக்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை மற்றும் மாலையில் பூஜை முடிந்தவுடன் பக்தர்களுக்கு அருள் ஆசி மற்றும் பிரசாதங்களை வழங்கி சுவாமிகள் ஆசீர்வதித்தார். நிறைவு நாளில் சுவாமிகள் கோதண்டராமர் சுவாமி கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்களுக்கு மடத்தின் சார்பில் பரிசுகளை வழங்கி கௌரவித்தார். சுவாமிகள் 08-09-2025 காலை 5.30 மணியளவில்  பிலாஸ்பூர் சென்றபோது பொதுமக்கள் மற்றும் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அவரை வழி அனுப்பி வைத்தனர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளின் அருளாசியை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !