மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆவணி சோமவார சிறப்பு வழிபாடு
ADDED :391 days ago
கோவை; ஆவணி மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் தீப ஒளியில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் மூலவர் தர்மலிங்கேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார் . இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர். விழா நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.