மேட்டுப்பாளையம் மங்கள வலம்புரி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் மணி நகரில் அமைந்துள்ள, மங்கள வலம்புரி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.மேட்டுப்பாளையம் மணி நகரில், நியூ முனிசிபல் காலனியில், மங்கள வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. கும்பாபிஷேக விழா ஆறாம் தேதி பிள்ளையார் வழிபாட்டுடன் துவங்கியது. அன்று தீர்த்தக்குடங்கள், முளைப்பாலிகையை ஊர்வலமாக எடுத்து வந்தனர். மாலையில் முதல் கால வேள்வி பூஜை நடந்தது. ஏழாம் தேதி காலை இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. காலை, 8:00 லிருந்து 9:00 மணிக்கு யாகசாலையிலிருந்து தீர்த்த குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, கோபுர கலசத்தின் மீதும், விநாயகர் சுவாமி சிலை மீதும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். கும்பாபிஷேக வேள்வி பூஜைகளை சிறுமுகை மூலத்துறை குழந்தைவேல், சக்திவேல், மங்கலக்கரைப்புதூர் சந்திரசேகர் ஆகியோர் யாக வேள்வி பூஜைகளை செய்தனர். அதைத்தொடர்ந்து ஆசிரியர் முருகையன் தலைமையில், பாலமுருகன் குழுவினரின் வள்ளி கும்மி நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவில் மேட்டுப்பாளையம் நகரில் உள்ள வசிக்கும் பக்தர்கள் பங்கேற்றனர். கோவில் நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.