உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி தேவஸ்தானத்திற்கு மின்சார வாகனம் நன்கொடை

திருப்பதி தேவஸ்தானத்திற்கு மின்சார வாகனம் நன்கொடை

திருமலை; திருப்பதி தேவஸ்தானத்திற்கு இன்று மின்சார வாகனம் நன்கொடையாக வழங்கப்பட்டது


பெங்களூரை தளமாகக் கொண்ட டிவோல்ட் மின்சார வாகன பிரைவெட் லிமிடெட் நிறுவனம் ரூ. 15,94,962 மதிப்புள்ள மோன்ட்ரா எலக்ட்ரிக் ஏவியேட்டர் (e-SCV) வாகனத்தை இன்று திங்கட்கிழமை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கியது. இதற்காக, நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஸ்ரீவாரி கோயில் முன் வாகனத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, ஸ்ரீவாரி கோயிலின் துணை செயல் அலுவலர் லோகநாதத்திடம் சாவியை ஒப்படைத்தனர். நிகழ்ச்சியில் தேவஸ்தானத வாரிய உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !