உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகை முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா; தாரை, தப்பட்டை முழங்க கோலாகலம்

நாகை முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா; தாரை, தப்பட்டை முழங்க கோலாகலம்

நாகை ; கோலாட்டம், கும்மியாட்டத்துடன் நாகையில் வெகு விமர்சையாக நடைபெற்றது முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா. தாரை, தப்பட்டை, தப்ஸ், மேளதாளம் முழங்க ஊர் முழுவதும் தேரை இழுத்து வந்து பக்தர்கள்  பக்தி பரவச தரிசனம் செய்தனர்.


நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த முத்து மாரியம்மன் கோவிலின் ஆவணி திருவிழா கடந்த 5,ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. திருவிழாவில் நாள்தோறும் அம்பாள், அம்ச வாகனம், ரிஷப வாகனம், மயில்வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்தார். முத்து மாரியம்மன் கோவிலின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.  இதற்காக வெண்பட்டுடுத்தி கோவிலில் இருந்து தேரில் எழுந்தருளிய முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைக்க, தேரானது தாரை, தப்பட்டை, தப்ஸ், மேளம் முழங்க ஊர் முழுவதும் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது கரகாட்ட கலை நிகழ்ச்சிகள் களை கட்டியதை தொடர்ந்து, பெண் பக்தர்கள் கோலாட்டம் அடித்தும், கும்மி பாடியும் தேரினை பக்தி பரவசத்துடன் இழுத்து வந்தனர்.  முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய 66 மீனவ கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !