காரமடை சந்தான வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED :55 days ago
காரமடையில் மிகவும் பிரசித்தி பெற்ற, அரங்கநாதர் கோவிலின் உப கோவில், சந்தான வேணுகோபால சுவாமி கோவில் ஆகும். இது ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டதாகும். இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, கோவிலில் பாமா, ருக்மணி சமேத சந்தான வேணுகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.