செப்டம்பர் 21ல் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமி ஆராதனை விழா
ADDED :104 days ago
சிருங்கேரி; புகழ்பெற்ற சிருங்கேரி சாராதா பீடத்தின் 71வது ஆராதனையும், 34வது ஆச்சார்யருமான ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹாஸ்வாமி ஆராதனை விழா வரும் செப்டம்பர் 21ம் தேதி அன்று மஹாளய அமாவாசை நாளில் பயபக்தியுடன் அனுசரிக்கப்படும். விழாவில் சிறப்பு வழிபாடுகளும், ஆராதனையும் நடைபெற உள்ளது. சிருங்கேரியில் உள்ள தக்ஷிணாம்நாய ஸ்ரீ சாரதா பீடத்தில் ஜகன்மாதா ஸ்ரீ சாரதாம்பாவின் நவராத்திரி மஹோத்ஸவம் மிகவும் பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அஸ்வயுஜ சுக்ல பிரதிபத் 22ம் தேதி முதல் அக் 03ம் தேதி வரை புனித உற்சவங்கள் நடைபெற உள்ளன.