புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்
ADDED :54 days ago
புதுச்சேரி; புதுச்சேரி காந்தி வீதி வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு, உறியடி உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 10 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாற்று முறை நடந்தது. மாலை 6 மணிக்கு சுவாமி வீதியுலாவை தொடர்ந்து, 6.30 மணிக்கு உறியடி உற்சவம் நடந்தது. அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக விழாவையொட்டி பெருமாள் கோயில் மாட வீதிகளில் பாரதியார் பல்கலைக்கழக கூடம், நர்த்தகி நாட்டியாலயம், பாதாஞ்சலி கலைக்கூடம் சார்பில் கோலாட்டம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.