பிரதமருக்காக காரமடை அரங்கநாதர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :120 days ago
மேட்டுப்பாளையம்; பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ., சார்பில் காரமடை அரங்கநாதர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா, நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் காரமடையில் உள்ள புகழ்பெற்ற வைணவ திருத்தலமான அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில், காரமடை நகர பா.ஜ. சார்பில் பிரதமர் மோடி, ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும் என சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காரமடை நகர தலைவர் சதீஷ் குமார், வடக்கு மாவட்ட பொது செயலாளர் விக்னேஷ் மற்றும் மண்டல நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.