திருப்பதியில் டிசம்பர் மாத தரிசனம், ஒதுக்கீடு விவரங்கள் வெளியீடு
திருப்பதி; திருமலை திருப்பதியில் டிசம்பர் மாதத்திற்கான பல்வேறு தரிசனம் மற்றும் அறை ஒதுக்கீடுகளின் விவரங்கள் தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது
அதன் விவரங்கள் பின்வருமாறு; திருமலை ஸ்ரீவாரி அர்ஜித சேவா டிக்கெட்டுகளுக்கான டிசம்பர் மாத ஒதுக்கீடு செப்டம்பர் 18ம் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானத்தால் ஆன்லைனில் வெளியிடப்படும். இந்த சேவா டிக்கெட்டுகளுக்கான மின்னணு டிப்-க்கான ஆன்லைன் பதிவு செப்டம்பர் 20ம் தேதி காலை 10 மணிக்கு வரை செய்யப்படலாம். இந்த மாதம் முதல் அங்க பிரதக்ஷிண டோக்கன்கள் மின்னணு டிப் மூலம் ஆன்லைனில் வழங்கப்படும். இந்த டிக்கெட்டுகளைப் பெற்று செப்டம்பர் 20 முதல் 22 வரை மதியம் 12 மணிக்குள் தொகையை செலுத்தியவர்களுக்கு லக்கி டிப்பில் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
செப்டம்பர் 22ம் தேதி காலை 10 மணிக்கு கல்யாணோத்சவம், ஊஞ்சல் சேவா, அர்ஜித பிரம்மோத்சவம், சஹஸ்ரதீபலங்கார சேவா டிக்கெட்டுகளை வெளியிடப்படும். செப்டம்பர் 22ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மெய்நிகர் சேவை மற்றும் தரிசன இடங்கள் தொடர்பான ஒதுக்கீட்டை ஆன்லைனில் வெளியிடும். டிசம்பர் மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் ஒதுக்கீடு 23ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் திருமலை தரிசனம் செய்ய ஏதுவாக, இலவச சிறப்பு தரிசன டோக்கன்களின் ஒதுக்கீட்டை செப்டம்பர் 23ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும். சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீட்டை செப்டம்பர் 24ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடும். திருமலை மற்றும் திருப்பதியில் அறை ஒதுக்கீடு செப்டம்பர் 24ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். ஸ்ரீவாரி அர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யுமாறு திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.