பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி சனி பூஜை; சிறப்பு ஏற்பாடு
ADDED :68 days ago
புதுச்சேரி; பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடக்கிறது.
புதுச்சேரி அடுத்த பஞ்சவடீயில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் அமைந்துள்ளது. இங்குள்ள ஸ்ரீவரி வேங்கடாஜலபதி சுவாமிக்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ‘ஸ்வர்ண புஷ்ப சங்கல்ப பூஜை’, சிறப்பு அர்ச்சனை மற்றும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், புரட்டாசி மாத 4 சனிக்கிழமைகளிலும் காலை 11:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை மகா சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்டியினர் செய்து வருகின்றனர்.