உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாளக்கரை நரசிம்ம பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு

தாளக்கரை நரசிம்ம பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு

அவிநாசி; அவிநாசி அடுத்த தாளக்கரை நரசிம்ம பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார்.


கோவையில் இருந்து சுமார் 53 கி.மீ. தூரத்தில் உள்ள தாளக்கரையில், மகாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் அருள்கிறார் நரசிம்மர். இங்கே நரசிம்ம பீடத்தில் சக்கரமும், அர்த்த மண்டபத்தில் சாளக்கிராமமும் உள்ளன. முதலில் இந்த சாளக்கிராமமே நரசிம்மராக வழிபடப்பட்டதாம். எனவே இதை, ஆதி நரசிம்மர் என்கிறார்கள். இங்கே தரப்படும் எலுமிச்சை மற்றும் துளசி பிரசாதத்தை வீட்டில் பூஜையறையில் வைத்து வழிபட.. சகல நலன்களும் கைகூடும். இத்தகைய சிறப்பு மிக்க இத்தலத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாளை அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !