உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை தி.நகர் திருப்பதி கோயிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு; பக்தர்கள் குவிந்தனர்

சென்னை தி.நகர் திருப்பதி கோயிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு; பக்தர்கள் குவிந்தனர்

சென்னை; புரட்டாசி மாத சனிக்கிழமையை யொட்டி சென்னை தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் குவிந்தது.


சென்னை திநகரில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும், பிரமாண்ட அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு 4:00 மணி முதல் 6:30 மணி வரை சுப்ரபாதம், தோமால சேவை, அர்ச்சனை நடைபெற்றது. காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை நிவேத்தியம். காலை 7:45 முதல் 11:00 மணி வரை சர்வ தரிசனமும், தொடர்ந்து நைவேத்யமும் நடைபெற்றது. புரட்டாசி சனியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு திருமலை திருப்பதி கோவில் வளாகம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.  பக்தர்களுக்கு லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !