உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி விழா

மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி விழா

மதுரை: மதுரை,  கூடல் அழகர் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


மதுரை, மாவட்டத்தில், வைணவ ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றது, கூடல் அழகர் பெருமாள் கோவிலாகும். பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று உலகிலுள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் அதிகாலையில் பாடப்படும் "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்ற "திருப்பல்லாண்டு பாடல் இயற்றப்பட்ட தலம் மதுரை. இவ்வூரில் கூடலழகர் என்ற பெயரில் பெருமாள் அருளுகிறார். இங்கு புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வர். புரட்டாசி மாதத்தை ஒட்டி ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும். அதன்படி இன்று புரட்டாசி முதல் சனியை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி உடன் பெருமாள் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !