உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் ஜன. 14ல் மகரவிளக்கு பூஜை!

சபரிமலையில் ஜன. 14ல் மகரவிளக்கு பூஜை!

சபரிமலை: ரும் ஜன., 14 ல், சபரிமலையில் மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. சபரிமலையில் நாளை மண்டலபூஜை முடிந்ததும், இரவு 10 மணிக்கு நடை மூடப்பட்டு, மீண்டும் மகரவிளக்கு கால பூஜைக்காக, டிச., 30 மாலையில் திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு மூடப்படும். அன்றைய தினம் மற்ற பூஜைகள் நடைபெறாது. மறுநாள், டிச., 31ல், அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டதும், துவங்கும் மகரவிளக்கு கால நெய்யபிஷேகம், 2013 ஜன.,18 வரை நடைபெறும். முன்னதாக, ஜன., 11 ல், எருமேலி பேட்டைத்துள்ளலும் ஜன., 12 ல், பந்தளத்திலிருந்து திருவாபரண புறப்பாடும், ஜன., 14 ல், மகரவிளக்கு பெரு விழாவும், ஜன.,19 ல், மாளிகைப்புறத்தில் குருதி பூஜையும் நடைபெறும். ஜன., 20 ல் காலை 7 மணிக்கு பந்தளம் மன்னர் முன்னிலையில் கோயில் நடை மூடப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !