உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்டாதசபுஜ மகாலட்சுமி துர்க்காதேவி கோயிலில் சண்டிஹோமம்

அஷ்டாதசபுஜ மகாலட்சுமி துர்க்காதேவி கோயிலில் சண்டிஹோமம்

மயிலாடுதுறை; அஷ்டாதசபுஜ மகாலட்சுமி துர்க்காதேவி கோயிலில் சண்டிஹோமம் துவங்கியது.


மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தில் அமைந்துள்ள அஷ்டாதசபுஜ மகாலட்சுமி துர்க்காதேவி கோயிலில் நவரத்திரி விழாவையொட்டி ஆண்டுதேறும் சண்டிஹோமம்  நடப்பது வழக்கம். அதேபோல் இவ்வாண்டு வரும் 2ம் தேதி சரஸ்வதி பூஜை நடைபெற உள்ளதையொட்டி நேற்று சண்டிஹோமம் துர்க்காதேவி அம்மன் கோயில் சன்னதியில் தொடங்கியது. தருமை ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கன்னிபூசை, சுஹாசினிபூஜை, வடுகபூஜை, கோ பூஜை, கஜபூஜை, ஒட்டகபூஜை, அசுபூஜைகள் செய்து அஷ்டாதசபுஜ மகாலட்சுமி துர்க்காதேவி சன்னதி எதிரே அமைக்கப்பட்ட யாகசாலையில் சண்டிஹோமத்தை தொடங்கிவைத்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். நவராத்திரி 9 நாட்களும் சண்டிஹோமம் செய்யப்பட்டு வரும் 2ம் தேதி ஆயுதபூஜை திருநாளில் மகாபூர்ணாஹுதியாகி மறுநாள் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !