நவராத்திரி இரண்டாம் நாள்; முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம்
ADDED :390 days ago
கோவை; கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் தெரு எண் 98 ல் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் நவராத்திரி இரண்டாம் நாளை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் வெள்ளி காப்பு கவசத்துடன் மஞ்சள் காப்பு அலங்காரம், சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் .நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.