உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை திருப்பதியில் நாளை பிரம்மோற்சவம் துவக்கம்; தினமும் பக்தர்களுக்கு 8 லட்சம் லட்டு

திருமலை திருப்பதியில் நாளை பிரம்மோற்சவம் துவக்கம்; தினமும் பக்தர்களுக்கு 8 லட்சம் லட்டு

திருப்பதி; திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நாளை (24/9/2025) முதல் விமரிசையாக நடைபெறுகிறது.ஆண்டு முழுவதும் திருமலையில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில்  பிரம்மோற்சவ விழா  மிகப்பெரும் திருவிழாவாகும் லட்சக்கணக்கான  பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர்.ஐந்தாம் நாளான்று மூலவரே கருட வாகனத்தில் பக்தர்களை தேடி வருவதாக மக்கள் நம்புவதால், அந்த நாளில் பக்தர்கள் எண்ணிக்கை பல லட்சங்களை தொடும். ஒவ்வொரு நாளும் காலை 8 மணி, மற்றும் இரவு  7 மணி க்கு சுவாமி புறப்பாடு இருக்கும்.உற்சவரான ஸ்ரீ மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் (சில சமயங்களில் தனியாக) விதம் விதமான வாகனங்களில் மாடவீதிகளில் வலம் வந்து  பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழா நாட்களில் தினமும் 1.16 லட்சம் சிறப்பு தர்ஷன் டிக்கெட் வழங்கப்படும்; வி.ஐ.பி தர்ஷன் கிடையாது. 36 பெரிய திரைகள் மூலம் வாகன சேவைகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்படும். தினசரி 8 லட்சம் லட்டு பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும். கருட சேவையின் போது 14 வகை உணவுகள் இலவசமாக வழங்கப்படும். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெறும் மலர்கண்காட்சி பக்தர்களிடையே சிறப்பாக வரவேற்பு பெற்றுள்ளது. இந்த ஆண்டு 3.5 கோடி ரூபாய் செலவில் 60 டன் மலர்களைக் கொண்டு கண்காட்சி நடத்தப்படுகிறது. 28 மாநிலங்களைச் சேர்ந்த  கலாச்சார குழுக்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.முக்கிய நிகழ்வுகள்24/09/2025 – காலை கொடி ஏற்றம். இரவு 9 மணி: பெரிய சேஷ வாகனம்25/09/2025 – காலை 8 மணி: சின்ன சேஷ வாகனம், மதியம் 1–3 மணி: ஸ்னபனம், மாலை 7 மணி: ஹம்ஸ வாகனம்26/09/2025 – காலை 8 மணி: சிம்ம வாகனம், மதியம் 1 மணி: ஸ்னபனம், மாலை 7 மணி: முத்துப்பந்தல் வாகனம்27/09/2025 – காலை 8 மணி: கல்பவிருட்ஷ வாகனம், மதியம் 1 மணி: ஸ்னபனம், மாலை 7 மணி: சர்வபூபால வாகனம்28/09/2025 – காலை 8 மணி: மோகினி அவதாரம், மாலை 6:30 மணி: கருட வாகனம்29/09/2025 – காலை 8 மணி: அனுமந்த வாகனம், மதியம் 4 மணி: பொன்னிரதம், மாலை 7 மணி: கஜ வாகனம்30/09/2025 – காலை 8 மணி: சூர்ய பிரபை வாகனம், மாலை 7 மணி: சந்திர பிரபை வாகனம்01/10/2025 – காலை 7 மணி: தேரோட்டம், மாலை 7 மணி: அசுவ வாகனம்02/10/2025 – காலை 6–9 மணி: சக்ரஸ்நானம், இரவு 8:30–10 மணி: கொடி இறக்குதல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !