காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் நவராத்திரி கொலு தர்பார் துவங்கியது
காரைக்கால்; காரைக்கால் கயிலாசநாதர் திருக்கோவில் மற்றும் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில் நவராத்திரி கொலு தர்பார் தொடங்கியது.
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள அம்மையார் கோவில் மணிமண்டபத்தில் இன்று கயிலாசநாதர் திருக்கோவில் மற்றும் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில் நவராத்திரி கொலு தர்பார் நேற்று முதல் 30ம்தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள் தொடங்கிய நவராத்திரி கொலு தர்பார்ரை திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதினம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் துவக்கி வைத்தாார். இன்றைய நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், தனி அதிகாரி காளிதாசன் உள்ளிட்ட சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை அமைப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், மரகதவேல், ரவிசந்திரன், இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.