உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவிற்கு முகூர்த்த கால் நடப்பட்டது

அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவிற்கு முகூர்த்த கால் நடப்பட்டது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பூர்வாங்க பணி தொடங்க ராஜகோபுரம் முன் முகூர்த்த பந்தக்கால் நடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா, 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அதற்கான, பூர்வாங்க பணி தொடங்க பந்தக்கால் நடும் விழா இன்று நடந்தது. இதையொட்டி, அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பந்தக்காலுக்கு, சம்பந்த விநாயகர் சன்னிதியில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின், மேளதாளம் முழங்க பந்தக்கால், கோவிலில் இருந்து எடுத்துவரப்பட்டு, அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு நடப்பட்டது. அப்போது, பக்தர்கள், "அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தர்கள் கோஷமிட்டனர்.பஞ்ச மூர்த்திகளான விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராதி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழா, வரும் நவ 21ம் தேதி துவங்கி டிச 7ம் தேதி நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !