தென்திருப்பதியில் பிரம்மோற்சவ விழா; சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருப்பதி ஸ்ரீ வாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவம் வைபவம் நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து அருள்பாலித்தார்.மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில், தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாதம் நவராத்திரி, பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் மலையப்ப சுவாமி பல்வேறு வாகனத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்து வருகிறார். இன்று காலை உற்சவத்தில் சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரும் 28-ம் தேதி கருட சேவையும், அதனை தொடர்ந்து அக்டோபர் 1ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்க உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அன்னூர் கே.கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் செய்திருந்தனர்.