வரசித்தி வாராகி அம்மன் கோயில்களில் வளர்பிறை பஞ்சமி
ADDED :135 days ago
சாணார்பட்டி; திண்டுக்கல் மாவட்டத்தில் கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயில் உட்பட பல கோயில்களில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி யாக பூஜையில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். மாவட்டத்தில் வாராகி அம்மனுக்கு திரவிய அபிஷேகம், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. பக்தர்கள் தேங்காயில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் பீடாதிபதி சஞ்சீவி சுவாமிகள் பூஜைகளை நடத்தி வைத்தார். இங்கு நடந்த யாக பூஜையில் வரசித்தி வாராகி அம்பாள் மகாலட்சுமி சொரூபமாக காட்சி தந்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. திண்டுக்கல் ஜான்பிள்ளை சந்து ,கூட்டுறவு நகர் செல்வ விநாயகர் கோயிலில் வாராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.