உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரை கோயில்களில் புரட்டாசி 2வது சனிக்கிழமை வழிபாடு

மானாமதுரை கோயில்களில் புரட்டாசி 2வது சனிக்கிழமை வழிபாடு

மானாமதுரை; மானாமதுரை,இளையான்குடியில் உள்ள பெருமாள், ஆஞ்சநேயர் கோயில்களில் புரட்டாசி 2வது சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.புரட்டாசி மாதம் கடந்த 17ம் தேதி பிறந்ததை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தினம் தோறும் பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிற நிலையில் இன்று புரட்டாசி 2வது சனிக்கிழமை என்பதால் மானாமதுரை வீர அழகர் கோயிலில் அதிகாலை உற்சவர் சுந்தரராஜ பெருமாளுக்கும்,வீர ஆஞ்சநேயருக்கும் 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக,ஆராதனைகள், பூஜைகள் நடத்தப்பட்டு வடை, வெற்றிலை மாலைகள் சாத்தப்பட்டன. இதே போன்று தியாக வினோத பெருமாள், அப்பன் பெருமாள் உள்ளிட்ட கோயில்களிலும், வேம்பத்தூரில் உள்ள பூமி நீளா சுந்தரராஜ பெருமாள் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இளையான்குடியில் உள்ள மதன வேணுகோபால பெருமாள் கோயிலும் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !