/
கோயில்கள் செய்திகள் / திருப்பதி பிரம்மோற்சவம்: ஆண்டாள் மாலை சூடி மோகினி அலங்காரத்தில் பெருமாள் பவனி
திருப்பதி பிரம்மோற்சவம்: ஆண்டாள் மாலை சூடி மோகினி அலங்காரத்தில் பெருமாள் பவனி
ADDED :119 days ago
திருப்பதி: திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளான நேற்று காலை பெருமாள் மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருமலை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவம், விமரிசையாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ விழாவின், நான்காம் ஐந்தாம் நாளான நேற்று காலை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை அணிந்து, தோளில் கிளி சுமந்து மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் நடனம் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தன. விழாவில் ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.