காளஹஸ்தி தட்சிண காளிகாதேவி கோயிலில் மகா கும்பாபிஷேகம்
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி மண்டலத்தில் வேடாம் கிராமத்தில் வீற்றிருக்கும் தட்சிண காளிகாதேவி கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கோயில் மண்டபத்தின் புனரமைப்புக்கான மூன்று நாள் செயல்முறையான மகா சம்ப்ரோக்ஷண கும்பாபிஷேகம் விஜயதசமி நாளில் நடைபெற்றது.
விழாவில் ஓங்கோல் சனாதன சங்கரி பீடத்தின் தலைவர் பிரம்மஸ்ரீ நரசய்யாச்சாரி சுவாமிகள் தலைமையில், சுப்ரபாதம், வேத பாராயணம், கணபதி பூஜை, ரக்ஷாபந்தன் கங்காஜல பூஜை, கோபூஜை, லட்சுமி யாக அலங்காரம், மகா கும்பாபிஷேகம் உள்ளிட்டவை மூன்று நாட்கள் நடந்தது. சண்டி ஹோமம், ருத்ர ஹோமம், அனைத்து கடவுள்களின் ஹோமம், தட்சிண காளி மகாகால ஹோமம், மஹா பூர்ணாஹுதி, திக்தேவதா பலி, தட்சிண காளிகா தேவதா அர்ச்சனை, மகா நைவேத்ய சஹித நீராஜனம் உள்ளிட்ட வாஸ்து ஹோமம், நவக்கிரக பூஜைகள் நடந்தன. பின்னர், விஜயதசமி நாளான நேற்று மதியம் கோபுர கலசம் மற்றும்( அந்தராலய ) மூலவர் காளி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நன்கொடையாளர் மற்றும் கும்பாபிஷேக ஏற்பாட்டாளர்களான கோபிநாத் ரெட்டி - கீர்த்தி ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் காளி அம்மன் பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்று, தேவியை தரிசனம் செய்து தீர்த்தப் பிரசாதங்களை பெற்று சென்றனர்.