கோலாகலமாக நடைபெற்ற திருப்பதி பிரம்மோத்ஸவம் கருட கொடி இறக்கத்துடன் நிறைவு
ADDED :108 days ago
திருப்பதி; கொடி இறக்கத்துடன் ஸ்ரீவாரி சாளக்கட்ட பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 24ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் இரவில் தேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி பல்வேறு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். நேற்று காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து இரவு ஏழுமலையான் கோயில் முன் உள்ள தங்க கொடிமரத்தில் கருட கொடி இறக்கத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. விழாவில் திருமலை ஸ்ரீ பெறிய ஜீயர்ஸ்வாமி, ஸ்ரீ சின்ன ஜியர்ஸ்வாமி, தேவஸ்தான இஓ அனில் குமார் சிங்கால், சிவிஎஸ் ஓ முரளிகிருஷ்ணா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.