காரமடையில் 108 திருவிளக்கு பூஜை
ADDED :2 hours ago
காரமடை; கோவை மாவட்டம் காரமடையில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
காரமடை கிழக்கு ஒன்றிய இந்து அன்னையர் முன்னணி சார்பில் கன்னார்பாளையம் மாகாளியம்மன் திடலில் 108 கார்த்திகை தீபத்தை பெண்கள் கையில் ஏந்தி சிறப்பு விளக்கு பூகையில் ஈடுபட்டனர். முன்னதாக பெண்கள் கன்னார்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று மாகாளியம்மன் கோவில் வந்தடைந்தனர். பின் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதற்கு இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவி பாரதி தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட தலைவர் சிவப்புகழ் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். நந்தகுமார், உதய பாலாஜி, தனுஷ்கோடி மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.