உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி தேர்த்திருவிழா

புரட்டாசி தேர்த்திருவிழா

அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி 3வது சனிக்கிழமையை முன்னிட்டு தேர்த்திருவிழா நடைபெற்றது.


முன்னதாக நேற்று முன்தினம் தீர்த்தம் கொண்டு வருதல், பெருமாள் மற்றும் கருடாழ்வாருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. அதன்பின், நேற்று படைக்கலம் எடுத்தல், காப்பு கட்டுதல், ராமர் கவாளம் எடுத்தல், தேர் திருவீதி உலா வருதல் நடந்தது. தொடர்ந்து பெருமாளின் நாமத்திருவிழா, அபிஷேக அலங்கார பூஜைகள், சீர் கொண்டு வருதல் நடைபெற்றது. திருவிழாவில் இன்று மறுபூஜை, மஞ்சள் நீராட்டு விழா ஆகியவற்றுடன் விழா குழுவினர் மற்றும் வெள்ளியம்பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் நடைபெறுகிறது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !