மழை வேண்டி பல ஆண்டுகளுக்குப் பின்பு சிலையெடுப்பு
ADDED :111 days ago
சோழவந்தான்; சோழவந்தான் அருகே நரியம்பட்டியில் மழை வேண்டி பல ஆண்டுகளுக்குப் பின்பு அய்யனார் கோயில் கருப்பசாமி சிலை எடுப்பு விழா நடந்தது. கருப்பசாமி, கன்னிமார், நாய் குட்டி சிலை பூஜாரி வீட்டில் இருந்து எடுத்துவரப்பட்டு ஊர் மந்தையில் கண் திறந்து, பின்பு கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மழை வேண்டி கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. கிராமத்தினர் ஏற்பாடுகளை செய்தனர். விக்கிரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.