பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் கலாகர்ஷன பூஜை
பழநி; பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க கலாகர்ஷன பூஜை நடைபெற்றது.
பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அர்த்தமண்டப நுழைவாயிலில் இரட்டை மரக்கதவு, நிலை வாசலில் வெள்ளித்தகடுகள் பல ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்டு இருந்தன. அவை தற்போது பழுதடைந்துள்ளது திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அர்த்தமண்டப நிலை வாசல், மரக்கதவுகள் பதிக்கப்பட்ட வெள்ளி தகடுகள் புனரமைக்கும் பணி துவங்க நேற்று (அக்.,9) மாலை 7 மணிக்கு திருஆவினன்குடி கோயிலில் கலாகர்ஷன பூஜை வாஸ்து பூஜை நடைபெற்றது. இதில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து பங்கேற்றார். வெள்ளி தகடுகள் பதிக்கும் பணிகள் நிறைவு பெற்ற பின் அக்.,12 ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணிக்கு மேல் 6:30க்குள் புணராவாஹனம் செய்யப்படவுள்ளது. அதனை முன்னிட்டு அன்று அதிகாலை 4:00 மணிக்கு விளா னபூஜை நடைபெறும் தகடு பதிக்கும் பணியை கரூரைச் சேர்ந்த உபயதாரரால் நிறைவேற்றப்படுகிறது. மூலவர் சன்னதியில் வழக்கம்போல் தரிசனம் செய்யலாம். திருஆவினன்குடி கும்பாபிஷேக பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவு செய்யப்பட்டு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.