திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா அக்.,22 ல் துவக்கம்; 27ல் சூரசம்ஹாரம்
தூத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோயில் கந்த சஷ்டி விழா அக்., 22 ல் துவங்குகிறது. 27ல் சூரசம்ஹாரம் நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 22 ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்குகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் 27 ம் தேதி நடக்கிறது. இதில் 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள். 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 28ம் தேதி திருக்கல்யாண விழா சிற்பபாக நடைபெற உள்ளது என இன்று தூத்துக்குடியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். ஆலோசனைக் கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் ரா.கெளதம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தக்கார் அருள்முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.