உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயிலில் தங்கத் தொட்டில் அறை புதுப்பிப்பு

பழநி முருகன் கோயிலில் தங்கத் தொட்டில் அறை புதுப்பிப்பு

பழநி; பழநி முருகன் கோயிலில் தங்கத் தொட்டில் நேர்த்திக்கடன் செலுத்தும் அறை புதுப்பிக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.


பழநி முருகன் கோயிலில் இரண்டு வயது உட்பட்ட குழந்தைகளை தங்க தொட்டிலிட்டு பக்தர்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருகின்றனர். இதற்கு காணிக்கை ரூ. 300 செலுத்தி பங்கேற்கலாம். இதனை கோயில் வலைதளம் மூலம் முன்பதிவு செய்ய இயலும். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தையை தங்க தொட்டிலிலிட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றிய பின் பிரசாதம் வழங்கப்படும். இதற்கான தங்க தொட்டில் அறை முருகன் கோயிலில் தென்மேற்கு திசையில் தங்கரத அறைக்கு அருகே உள்ளது. தற்போது லட்சக்கணக்கான ரூபாய் புணரமைத்து புதுப்பொலிவுடன் பக்தர்களின் பயன்பாட்டிற்கு பூஜைகளுடன் நேற்று கொண்டு வரப்பட்டது. நிகழ்ச்சியில் துணை கமிஷனர் லட்சுமி, அறங்காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !