உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஞ்சுகுழிப்பட்டி மகா கணபதி கோயில் கும்பாபிஷேகம்

அஞ்சுகுழிப்பட்டி மகா கணபதி கோயில் கும்பாபிஷேகம்

சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே அஞ்சுகுழிப்பட்டி மகா கணபதி கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


விழாவையொட்டி முன்னதாக நேற்று முன்தினம் திருச்செந்தூர், ராமேஸ்வரம், திருமலைக்கேணி, அழகர்கோயில்மலை உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாரி ஊர்வலமாக கோவில் முன் அமைக்கப்பட்ட யாகசாலைக்கு அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து கணபதி பூஜை, நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை, வருண வழிபாடு, கலச பூஜை, கோமாதா பூஜை, வாஸ்து சாந்தி, கலாகர்ஷணம் போன்ற பூஜைகள் நடந்தது. பூஜைகளை மேட்டுக்கடை டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !