உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கே.அய்யாபட்டி காளியம்மன் கோயிலில் மண்டல பூஜை விழா

கே.அய்யாபட்டி காளியம்மன் கோயிலில் மண்டல பூஜை விழா

கோபால்பட்டி; கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டி மாணிக்க விநாயகர், காளியம்மன், பகவதி அம்மன், பாலமுருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் 48வது நாள் மண்டல பூஜை விழா‌ நடந்தது. விழாவையொட்டி நேற்று கோவிலில் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, நவகிரக ஹோமம், பஞ்சகவ்ய யாகம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாணிக்க விநாயகர், காளியம்மன், பகவதி அம்மன், பாலமுருகன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் பழக்கப்பட்டது. இந்த விழாவில் கோம்பைப்பட்டி, சின்ன கோம்பைப்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, பாப்பம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !