உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யலுார் இடும்பன், ஆதிசிவன் கோயிலில் ஆண்டு விழா

அய்யலுார் இடும்பன், ஆதிசிவன் கோயிலில் ஆண்டு விழா

வடமதுரை; அய்யலுார் தீத்தாகிழவனுார் கோவில் தோட்டம் நியாய விநாயகர், பேசும் பழனியாண்டவர், கானகத்து மாரியம்மன், இடும்பன், ஆதிசிவன் கோயிலில் 59வது ஆண்டு விழா நடந்தது. யாக பூஜை, தேன், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள், தீபாராதனை, அன்னதானம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சுவாமி ஊர்வலம் புறப்பட்டு கடவூர் பிரிவு வரை சென்று அய்யலுார் கடை வீதி வழியே சன்னதி திரும்பியது. கோயில் நிர்வாகி வி.செந்தில்நாதன், விழா குழுவினர் ஏற்பாட்டினை செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !