வெயிலில் காயும் சீவலப்பேரி காசி விஸ்வநாதர் கோயில் தேர்
ADDED :20 minutes ago
திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் தேர், 45 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் தேரோட்டம் நடைபெற்றது. ஆனால் தற்போது அந்தத் தேர் வெயிலில் காய்ந்து, மழையில் நனையும் நிலையில் இருப்பது பக்தர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. சீவலப்பேரி காசி விஸ்வநாதர் கோயிலின் பழைய தேர் கடந்த 45 ஆண்டுகளாக சேதமடைந்து பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. இதையடுத்து பொதுமக்கள் பங்களிப்பு மற்றும் ஹிந்து அறநிலையத்துறை இணைந்து ரூ.55 லட்சம் மதிப்பில் புதிய தேர் தயாரிக்கப்பட்டது. கடந்த ஏப்ரலில் தேரோட்டம் நடந்தது. ஆனால் தற்போது தேருக்கு தனியான நிலையம் அமைக்கப்படாததால், அது கோயில் வெளிப் பகுதியில் வெயிலிலும் மழையிலும் பாதிக்கப்படும் நிலையில் இருக்கிறது. இதனால் தேர் சிற்பங்கள் சேதமடையும் அபாயம் உருவாகியுள்ளது.