வாராகி அம்மன் கோவிலில் நெய்யில் தெரிந்த அம்மன் உருவம்; பக்தர்கள் பரவசம்
ADDED :12 minutes ago
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் கோவிலில் புரட்டாசி மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் லலிதாம்பிகை அம்மனுக்கு நெய் குளம் அமைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நெய்யில் தெரிந்த அம்மன் உருவம் கண்டு பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.