உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குஜராத் கோயிலுக்கு ரூ.11 ‌கோடியில் தங்க தகடு காணிக்கை!

குஜராத் கோயிலுக்கு ரூ.11 ‌கோடியில் தங்க தகடு காணிக்கை!

ஆமதாபாத்: குஜராத் சோம்நாத் கோயிலுக்கு மும்பை தொழிலதிபர் ரூ. 11 கோடி மதிப்பிலான 30 கிலோ எடை கொண்ட தங்கத்தகடை காணிக்கையாக வழங்கினார். மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் திலிப்லஹி. குஜராத் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பி்ன்னர் ரூ.11 கோடி மதிப்பிலான 30கிலோ எடை கொண்ட தங்க தகடை காணிக்கையாக வழங்கினார். இவ்வளவு பெரிய காணிக்கையினை வழங்கியிருப்பது குஜராத் கோயிலுக்கு கிடைத்த பெருமை என கோயில் அறங்காவலரும், முன்னாள் முதல்வருமான கேசுபாய் பட்டேல் கூறினார். இது குறித்து சோம்நாத் கோயில் அறங்காவலர் பி.கே. லஹரி கூறுகையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இங்கு வந்த தொழிலதிபர் திலிப்லஹி, தங்க தகடினை காணிக்கையாக வழங்குவதாக கூறினார். அதன்படி டில்லியில் கலைஞர்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட 30 கிலோ தங்க தகடினை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரயில் கொண்டுவரப்பட்டு கோயிலில் காணிக்கையாக செலுத்தினார். இதற்கு முன்பு ‌ஜோதிரிலிங்கா என்ற தொழிலதிபர் வெள்ளி தகடினை காணிக்கையாக வழங்கினார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !