திருவண்ணாமலையில் சிறப்பு அலங்காரத்தில் நடராஜர்!
ADDED :5016 days ago
திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில், நடராஜர் பெருமாள் மற்றும் சிவகாமியம்மன் மாட வீதி செல்ல ஆயிரம்க்கால் மண்படத்திலிருந்து உள்பிரகாரம் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மார்கழி பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். பின்பு ராஜகோபுரம் முன் பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி ஸ்வாமி தரிசனம் செய்தனர்.