திருவாதிரை விரதம்; நடராஜரை தரிசிக்க நல்லதே நடக்கும்..!
ADDED :156 days ago
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் இருப்பவர் சிவன். இன்று அனைத்து சிவாலயங்களிலும் நடராஜருக்கு திருமஞ்சனம் நடக்கும். முருகப்பெருமான் இந்த விரதம் இருந்து ஈசனின் அருள்பெற்றார். திருவாதிரை நடராஜருக்குரிய சிறப்பான விரதநாள் ஆகும். நட்சத்திரங்களில் ‘திரு என்ற அடைமொழியோடு வருவது ஆதிரை மற்றும் ஓணம் மட்டுமே. ஆடல்வல்லானின் ஆட்டத்தாலேயே அண்டசராசரங்களும் இயங்குகின்றன. வீட்டில் சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை படிக்க சிவ அருள் கிடைக்கும். மாதந்தோறும் திருவாதிரை விரதமிருந்து கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம். இன்று நடராஜரை தரிசித்து ஆடல்வல்லானின் அருளை பெறுவோம்!