உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை மாரியம்மன்!

கோட்டை மாரியம்மன்!

கோட்டை மாரியம்மன் கோயில்- பூட்டு தயாரிப்புக்கு பெயர்பெற்ற திண்டுக்கல்லில் அமைந்துள்ள பிரபல அம்மன் கோயில் இது. ஒரு கோட்டைக்குள் அமைந்த மாரியம்மன் கோயில் என்பதால் இந்தப் பெயர். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்குள்ள மலைக் கோட்டையின் அடிவாரத்தில் தங்கியிருந்த திப்பு சுல்தானின் படைவீரர்கள் ஒரு மாரியம்மன் சிலையை நிறுவி வழிபட்டனர். அதன்பிறகு எழுந்ததுதான் இன்றைய கோயில் ! இன்று, இந்தக் கோட்டை மாரியம்மன் திண்டுக்கல் மக்களின் காவல் தெய்வமாகவும் திகழ்கிறாள். ஆண்டுதோறும் மாசி மாதம் 20 நாட்கள் இங்கு நடைபெறும் திருவிழா சிறப்புப்பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !