ஐப்பசி அமாவாசை; சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் கோயிலில் 108 லிங்காபிஷேகம்
ADDED :33 minutes ago
சிவகங்கை; மானாமதுரை வட்டம் கட்டிக்குளம், ஸ்ரீ சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு 108 லிங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
மானாமதுரை அருகே உள்ள பிரசித்தி பெற்ற கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயிலில் ஐப்பசி அமாவாசை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு 108 லிங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் கட்டிக்குளம் கிராமத்தினர் செய்திருந்தனர்.