கடும்குளிர்; சிறப்பு பூஜைகளுக்கு பின் கேதார்நாத் கோவில் மூடப்பட்டது
கேதார்நாத்; பதினொன்றாவது ஜோதிர்லிங்க தலமான கேதார்நாத் கோவில் சிறப்பு பூஜைகளுக்கு பின், குளிர்காலத்திற்காக இன்று காலை மூடப்பட்டது.
உத்தர்கண்ட் மாநிலத்தில், கடும் குளிருடன், பனிப்பொழிவு துவங்கியுள்ளதால், பிரசித்தி பெற்ற, கேதார்நாத், கங்கோத்ரி, யமுனாத்ரி கோவில்கள் மூடப்பட்டன. இமயமலை மாநிலங்களில் ஒன்றான, உத்தர்கண்டில், பனிமலைகள் சூழ்ந்த பகுதியில், இந்த நான்கு கோவில்களும் உள்ளன. வழக்கமாக, கடுங்குளிர் காலத்தில் மூடப்படும் இக்கோவில்கள், மூன்று மாதங்களுக்குப் பின் தான் திறக்கப்படும். அந்த வகையில், நேற்று கங்கோத்ரி கோவில் மூடப்பட்டது. இன்று கேதார்நாத் சிவன் கோவில் மூடப்பட்டன. மூடப்படுவதற்கு முன்பு, ஸ்ரீ கேதார்நாத் தாம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, இராணுவ இசைக்குழுவினரால் பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன. விழாவில் சுமார் 10,000 பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கலந்து கொண்டார்.