உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கோடி வில்வம் மற்றும் கோடி குங்கும அர்ச்சனை

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கோடி வில்வம் மற்றும் கோடி குங்கும அர்ச்சனை

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கோடி வில்வம் மற்றும் கோடி குங்கும அர்ச்சனை நடைப்பெற்றது.


இந்த சிறப்பு உற்சவம் கோயில் பாரம்பரிய முறைப்படி ஆண்டுதோறும் 27 நாட்களுக்கு நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு வேத பள்ளிகளிலிருந்து வேதப் பண்டிதர்களை  வரவழைக்கப்பட்டுள்ளனர் . இந்த நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மூலவர் சன்னதி எதிரில் உள்ள சஹஸ்ர லிங்கேஸ்வரர் முன்  நடத்தப்படுகின்றன. முன்னதாக சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சுவாமி அம்மையார்களை  கலசத்தில் ஆவவனம் செய்தனர். தொடர்ந்து, வேத மந்திரங்களுடன்  தினந்தோறும்  ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ( மூலவர்) முன் கோடி வில்வ அர்ச்சனையும் மற்றும் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் (மூலவர்) முன் கோடி குங்குமம் அர்ச்சனையும் நடைபெற்று வருகிறது.


தெலுங்கு கார்த்திகை மாதம் 22.10. 25 முதல் 20.11. 25 வரை தினந்தோறும் கார்த்திகை மாதம் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அதில் ஆகாய தீபமும் தினந்தோறும் மாலை நேரத்தில் ஏற்றி வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள் மற்றும் வேதப் பண்டிதர்கள் மாருதி சர்மா, ஸ்ரீனிவாஸ் சர்மா, சங்கமேஸ்வர சர்மா, விஸ்வநாத் சர்மா, அவினாஷ் சர்மா, ஹேமந்த் சர்மா, கிருஷ்ணமாச்சார்யா மற்றும் கோயில் துணை செயல் அதிகாரி வித்யாசாகர் ரெட்டி, மேற்பார்வையாளர் நாகபூஷணம் யாதவ், கோயில் ஆய்வாளர் வெங்கடசாமி மற்றும் பலர்  பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !