உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழா நிறைவு

முத்துமாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழா நிறைவு

கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி மங்களேஸ்வரி நகரில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு செப்.,4ல் முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. மண்டல பூஜைக்கான 48 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு மூலவர் முத்துமாரியம்மன், துர்க்கை, மகாலட்சுமி, விநாயகர், கருப்பணசுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. முன்னதாக திரிசூலம் வடிவில் சங்குகளால் வடிவமைக்கப்பட்டு அவற்றில் புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜைகள் நடந்தது. கோயில் அலங்கார மண்டபத்தில் யாக வேள்வி வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்கப்பட்டது. பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகக் குழு தலைவர் சிவக்குமார் தலைமையில் முத்தரையர் உறவின்முறை சங்கத்தினர் மற்றும் மங்களேஸ்வரி நகர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !