ஐப்பசி அனுஷம்; காஞ்சி மகா பெரியவர் விக்கிரகத்திற்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :34 minutes ago
கோவை; வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். கார்டனில் அமைந்துள்ள மகா சங்கரா மினி ஹாலில் ஐப்பசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் காஞ்சி மகா பெரியவர் விக்கிரகத்திற்கு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. இதில் மகா பெரியவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காஞ்சி மகா பெரியவரை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.