உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா; சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை

வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா; சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை

திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் வாகனத்தில் கோவில் உள்வளாகத்தில் புறப்பாடு


திருப்புகழை உலகிற்கு அளித்த அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருள்பாலித்த திருத்தலமான திருச்சி வயலூர் முருகன் கோவிலில் முருகப்பெருமானுக்கு உகந்ததாகக் கருதப்படும் கந்தசஷ்டிவிழா கடந்த 22 ஆம் தேதிகாப்பு கட்டுதலுடன்தொடங்கி நடைபெறுகிறது. நான்காம் திருநாளான இன்று சிங்காரவேலர் வாகனத்தில் எழுந்தருளி சிறப்பு தீபாராதனைக்குப் பிறகு, கோவில் உள் பிரகாரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார், சஷ்டி விரதம் கடைபிடிக்கும் திரளான பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டனர். தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு சஷ்டி மண்டபத்தில் சண்முக அர்ச்சனை லட்சார்ச்சனையும், தீபாராதனையும் நடைபெற்றது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !