உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சமுக மஞ்சள் வாராஹி அம்மன் கோவிலில் பஞ்சமி சிறப்பு வழிபாடு

பஞ்சமுக மஞ்சள் வாராஹி அம்மன் கோவிலில் பஞ்சமி சிறப்பு வழிபாடு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் டோல்கேட் அருகே நிறைமதி சாலையில் உள்ள பஞ்சமுக மஞ்சள் வாராஹி அம்மன் கோவிலில், பஞ்சமி திதியையொட்டி, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. அதனையொட்டி, அம்மனுக்கு பட்டு சார்த்தி, தங்கக்கவச அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பெண்கள் கோவிலில் உள்ள அம்மிக்கல்லில் பச்சை விரலி மஞ்சளை அரைத்து ஜல வாராஹி அம்மனுக்கு சார்த்தி நேர்த்திக்கடன் பூஜைளை செய்தனர். இன்றும், நாளையம் பஞ்சமி திதி இருப்பதால் இரு நாட்களும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தேங்காய் தீப வழிபாடு, ஊஞ்சல் உற்சவ சேவை  மற்றும் அன்னதானம் நடைபெறும்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !